/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வீணாகும் 'ஷெட்' பொருட்கள் தடுக்க வியாபாரிகள் கோரிக்கை
/
வீணாகும் 'ஷெட்' பொருட்கள் தடுக்க வியாபாரிகள் கோரிக்கை
வீணாகும் 'ஷெட்' பொருட்கள் தடுக்க வியாபாரிகள் கோரிக்கை
வீணாகும் 'ஷெட்' பொருட்கள் தடுக்க வியாபாரிகள் கோரிக்கை
ADDED : ஜூன் 10, 2024 01:56 AM
சென்னை:ரயில்வே துறை கட்டணம் உயர்வின்றி மாற்று வழிகளில் வருவாய் பெருக்க, பார்சல் ரயில்களை தனியாருக்கு குத்தகைக்கு விடுவது, விளம்பரங்கள் செய்வது, நடுத்தரமான ரயில் நிலையங்களில் பார்சல் மையங்கள் அமைப்பது, உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறது.
அந்தவகையில், ராயபுரத்தில் இருந்து அசாம், ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களுக்கு இடையே பார்சல் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இங்கிருந்து ஆடைகள், மோட்டார் உதிரி பொருட்கள், ஸ்டீல் பொருட்கள் உள்ளிட்டவை கையாளப்படுகின்றன.
ஆனால், சரக்குகளை கையாளும் நடைமேடை பகுதிகளில் போதிய அளவில் கூரையோ அல்லது ஷெட் வசதியோ இல்லை.
இதனால், மழை காலங்களில் பொருட்கள் நனைந்து சேதமடையும் நிலை ஏற்படுகிறது.
இது குறித்து, வியாபாரிகள் கூறுகையில், ''ராயபுரம் ரயில் நிலையத்தில் சரக்குகள் கையாளும் வசதி மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
வெளிமாநிலங்களில் இருந்து கொண்டு வரப்படும் பொருட்களை, வியாபாரிகள் இங்கிருந்து பல்வேறு இடங்களுக்கு எடுத்து சென்று விற்பனை செய்து வருகின்றனர்.
ஆனால், மழை காலத்தில் பொருட்கள் சேதமடைவதை தடுக்க தேவையான அளவுக்கு 'ஷெட்' இல்லை. வரும் மழைக்காலத்திற்கு முன், போதிய அளவில் ஷெட் அமைக்க ரயில்வே துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றனர்.