/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அண்ணா நகரில் போக்குவரத்து மாற்றம்
/
அண்ணா நகரில் போக்குவரத்து மாற்றம்
ADDED : ஜூன் 30, 2024 12:19 AM
சென்னை, 'ஹேப்பி ஸ்ட்ரீட்' நிகழ்ச்சி காரணமாக, அண்ணா நகரில் புளூஸ்டார் சந்திப்பு முதல், 2வது நிழற்சாலை - 3வது பிரதான சாலை சந்திப்பு வரை, இன்று காலை 6:00 மணி முதல், 9:00 மணி வரை, போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டு உள்ளது.
திருமங்கலத்திலிருந்து அண்ணா நகர் ரவுண்டானா, சிந்தாமணி நோக்கி செல்லும் வாகனங்கள் புளூஸ்டார் சந்திப்பில், 5வது நிழற்சாலையில் இடது புறம் திரும்பி, 6வது நிழற்சாலை வழியாக சிந்தாமணி செல்லலாம்.
திருமங்கலத்திலிருந்து அமைந்தகரை, ஈ.வெ.ரா., சாலை நோக்கி செல்லும் வாகனங்கள், புளூஸ்டார் சந்திப்பில், 5வது நிழற்சாலை வலதுபுறம் திரும்பி, 4வது நிழற்சாலை வழயாக பூந்தமல்லி நெடுஞ்சாலைக்கு செல்லலாம்.
அண்ணா நகர் ரவுண்டானாவிலிருந்து திருமங்கலம் நோக்கி செல்லும் வாகனங்கள், 2வது நிழற்சாலை நல்லி சில்க்ஸ் அருகே, 3வது பிரதான சாலையில் இடது புறம் திரும்பி, 4வது நிழற்சாலை வழியாக திருமங்கலம், முகப்பேர் செல்லலாம்.

