/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மடிப்பாக்கத்தில் போக்குவரத்து மாற்றம்
/
மடிப்பாக்கத்தில் போக்குவரத்து மாற்றம்
ADDED : ஆக 04, 2024 12:35 AM
சென்னை, மடிப்பாக்கம் பிரதான சாலை - கீழ்க்கட்டளை சந்திப்பு வரையிலும், மேடவாக்கம் பிரதான சாலையிலும் மெட்ரோ ரயில் பாதை பணிகள் நடக்கின்றன. இதனால், வாகன ஓட்டிகள் நலன் கருதி, மேற்கண்ட பகுதியில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக, காவல் துறை செய்திக்குறிப்பு வெளியிட்டு உள்ளது.
அதன் விபரம்:
கீழ்க்கட்டளையில் இருந்து மடிப்பாக்கம் நோக்கி செல்லும் அரசு மாநகர சிற்றுந்துகள் மற்றும் இதர இலகு வாகனங்கள் வழக்கம் போல் செல்லலாம்.
கைவேலியில் இருந்து கீழ்கட்டளை நோக்கி செல்லும் மாநகர சிற்றுந்துகள் மற்றும் இதர இலகு வாகனங்கள், சபரி சாலையில் இடதுபுறம் திரும்பி, லேக் வியூ சாலை - ராஜேந்திரன் நகர் சாலை - மேடவாக்கம் பிரதான சாலை வழியாக, கீழ்கட்டளை செல்லலாம்
மடிப்பாக்கத்தில் இருந்து கீழ்கட்டளை நோக்கி செல்லும் மாநகர சிற்றுந்துகள் மற்றும் இதர இலகு வாகனங்கள் இடதுபுறம் திரும்பி, சபரி சாலை வழியாக செல்ல வேண்டும்.
பின், லேக் வியூ சாலை - ராஜேந்திரன் நகர் சாலை - மேடவாக்கம் பிரதான சாலை வழியாக, கீழ்கட்டளை நோக்கி செல்லலாம்.
கனரக வாகனங்கள், மேடவாக்கம் பிரதான சாலையில் செல்ல தடை செய்யப்படுகிறது. அதாவது கீழ்க்கட்டளை சந்திப்பிலும், மடிப்பாக்கம் சந்திப்பிலும் மற்றும் பொன்னியம்மன் கோவில் சந்திப்பிலும் கனரக வாகனங்கள் இடது அல்லது வலது புறம் திரும்பி செல்லலாம். மாநகர பேருந்து தடத்தில் எந்த பிரச்னையும் இருக்காது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.