/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வேளச்சேரியில் போக்குவரத்து மாற்றம்
/
வேளச்சேரியில் போக்குவரத்து மாற்றம்
ADDED : ஆக 10, 2024 12:29 AM
வேளச்சேரி,
வேளச்சேரியில், தனியார் நிகழ்ச்சி காரணமாக வரும் 11, 18, 25 ஆகிய மூன்று நாட்கள், அதிகாலை 2:00 மணி முதல் காலை, 10:00 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது.
இதுகுறித்து காவல் துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
ஆலந்துார் மற்றும் ஜி.எஸ்.டி., சாலையிலிருந்து வேளச்சேரி உள்வட்டச் சாலை வழியாக, விஜயநகர் மற்றும் தரமணி நோக்கிச் செல்லும் வாகனங்கள் அனைத்தும், சன்ைஷன் பள்ளி அருகே வலது புறம் திரும்ப வேண்டும். பின் ரயில்வே மேம்பாலம் வழியாகச் செல்லலாம்.
விஜயநகர் மற்றும் தரமணியிலிருந்து வேளச்சேரி உள்வட்ட சாலையைப் பயன்படுத்தும் வாகனங்கள் அனைத்தும், ரயில்வே மேம்பாலம் வழியாக கைவேலி சந்திப்பில் யூ-டர்ன் செய்ய வேண்டும். பின், வேளச்சேரி உள்வட்ட சாலை வழியாகச் செல்லலாம்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டு உள்ளது.