/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அண்ணா சாலையில் போக்குவரத்து மாற்றம்
/
அண்ணா சாலையில் போக்குவரத்து மாற்றம்
ADDED : ஆக 21, 2024 12:29 AM

சென்னை, பல்லவன் சாலை - தீவுத்திடல் வரையிலான அண்ணாசாலையில், தெருவிளக்கு அமைக்கும் பணி நடைபெற்று வருவதால் ஒருவழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது.
சென்னையில் கார் பந்தயம் நடைபெறும் சாலைகளான, அண்ணாசாலை, சிவானந்தா சாலை, காமராஜர் சாலை, கொடிமரச்சாலைகளில் தடுப்புகள், தெருவிளக்குகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
தற்போது பல்லவன் சாலை - தீவுத்திடல் வரையிலான அண்ணாசாலையில், தெருவிளக்குகள் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதையொட்டி, வாகன போக்குவரத்தில் போலீசார் மாற்றம் கொண்டு வந்துள்ளனர்.
இருவழிப்பாதையான அண்ணாசாலையில், ஒரு வழியை முற்றிலுமாக மூடிவிட்டு மற்றொரு வழியில் வாகனங்கள் போய் வரும் படி மாற்றி உள்ளனர்.
பணிகள் முடிந்தவுடன் அண்ணாசாலை இருவழிப்பாதையாக மாற்றப்படும் என போலீசார் தெரிவித்தனர்.

