/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
போக்குவரத்து நெரிசலில் திணறும் நுாறடிச்சாலை நெடுஞ்சாலை ஆணையம், மெட்ரோ அலட்சியம்
/
போக்குவரத்து நெரிசலில் திணறும் நுாறடிச்சாலை நெடுஞ்சாலை ஆணையம், மெட்ரோ அலட்சியம்
போக்குவரத்து நெரிசலில் திணறும் நுாறடிச்சாலை நெடுஞ்சாலை ஆணையம், மெட்ரோ அலட்சியம்
போக்குவரத்து நெரிசலில் திணறும் நுாறடிச்சாலை நெடுஞ்சாலை ஆணையம், மெட்ரோ அலட்சியம்
ADDED : செப் 07, 2024 12:24 AM

சென்னைதேசிய நெடுஞ்சாலை ஆணையம், மெட்ரோ ரயில்வே நிர்வாகத்தின் அலட்சியத்தால், நுாறடிச்சாலையில் வாகன ஓட்டிகள், பயணியர் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
கிண்டி கத்திப்பாரா - மணலி இடையிலான நுாறடிச் சாலையில், 24 மணிநேரமும் வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலையை, கிண்டி கத்திப்பாரா முதல் மாதவரம் ரவுன்டானா வரை, மாநில நெடுஞ்சாலைத்துறை பராமரித்து வருகிறது. மாதவரம் ரவுன்டானா முதல் மணலி சந்திப்பு வரை, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கட்டண சாலையாக பராமரித்து வருகிறது. இதற்காக, மாத்துாரில் சுங்கச்சாவடி அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த சுங்கச்சாவடியில், நாள்தோறும் 50 லட்சம் ரூபாய் வரை கட்டணம் வசூல் செய்யப்படுகிறது.
சென்னை, எண்ணுார், காட்டுபள்ளி துறைமுகங்களுக்கு செல்லும் கன்டெய்னலர் லாரிகள், மணலியில் உள்ள தொழிற்சாலைகளுக்கு செல்லும் சரக்கு மற்றும் டேங்கர் லாரிகள், இச்சாலை வழியாக அதிகளவில் பயணிக்கின்றன.
தற்போது, இச்சாலையில் மஞ்சம்பாக்கம் முதல் அண்ணாநகர் வரை மெட்ரோ ரயில்வே வழித்தட கட்டுமான பணி நடந்து வருகிறது. இதனால், மாதவரம் ரவுன்டானா - மணலி இடையிலான கட்டண சாலையை, மெட்ரோ ரயில்வே நிர்வாகத்திடம், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஒப்படைத்துள்ளது. ஆனால், சுங்க கட்டண வசூல் தொடர்ந்து வருகிறது.
மழைக்கு முன்பே, மஞ்சம்பாக்கம் முதல் மாதவரம் புதிய பேருந்து நிலையம் வரை, சாலை குண்டும், குழியுமாக மாறி உள்ளது. இதை சீர்செய்வதற்கு மெட்ரோ ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை.
மெட்ரோ ரயில்வே வழித்தட பணிக்கு மட்டுமே நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறி, ஒப்பந்த நிறுவனம் கண்டுக்கொள்ளாமல் உள்ளது. குண்டும், குழியுமான சாலையில் கனரக வாகனங்கள், பேருந்துகள், கார்கள், டூவீலர்கள் தள்ளாடியபடியே செல்கிறது.
இதனால், 300 மீட்டர் சாலையை கடப்பதற்கு ஒரு மணிநேரத்திற்கு மேல் ஆகிறது.
இப்பகுதியில் ஊர்ந்து செல்லும் வாகனங்கள், ஜி.என்.டி., சாலை, சென்னை - கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலை, நுாறடிச்சாலையில் பயணிக்கும் வாகனங்கள் மாதவரம் ரவுன்டானாவில் நெரிசலில் சிக்கி தத்தளிக்கின்றன. இதனால் வெளியூர் செல்லும் பயணியர், மாதவரம் புறநகர் பேருந்து நிலையத்திற்கு குறித்த நேரத்திற்கு செல்ல முடியாமல் தவிக்கின்றனர்.
அங்குள்ள நான்கு சந்திப்புகளிலும் நின்று போக்குவரத்து போலீசார் பணியாற்றினால் மட்டுமே போக்குவரத்தை சீர் செய்ய முடியும். அவ்வப்போது, போலீசார் தலைகாட்டி சென்று விடுகின்றனர். விநாயகர் சதுர்த்தி பண்டிகை, சுபமுகூர்த்தகம் காரணமாக, இரண்டு நாட்களாக அந்த சந்திப்பில் கடும் போக்குவரத்து நெரிசல் தொடர்கிறது. அதிகாலையில் துவங்கி நள்ளிரவை கடந்தும் வாகனங்கள் விடிய, விடிய காத்திருக்கின்றன.
வடகிழக்கு பருவமழை காலம் துவங்கவுள்ள நிலையில், இனியாவது, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மற்றும் மெட்ரோ ரயில் நிர்வாகம், நுாறடிச்சாலையை விரைந்து சீரமைக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.