/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
போக்குவரத்து போலீஸ்காரர் தற்கொலை முயற்சி
/
போக்குவரத்து போலீஸ்காரர் தற்கொலை முயற்சி
ADDED : ஏப் 27, 2024 12:38 AM
திருவல்லிக்கேணி, புதிதாக துவங்கிய மார்க்கெட் நிறுவனத்தில் முதலீடு செய்து, 8 லட்சம் ரூபாய் இழந்த போக்குவரத்து போலீஸ்காரர் தற்கொலைக்கு முயன்று பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
சென்னை பூக்கடை போக்குவரத்து பிரிவில் போலீஸ்காரராக இருப்பவர் முனீஸ்வரன், 30. இவர், திருவல்லிக்கேணியில் தங்கியுள்ளார்.
அவருக்கு சென்னை ஆயுதப்படையில் வேலை பார்க்கும் பிரியா, அவரது நண்பர்கள் ஆனந்த், அஜீஸ் ஆகியோர் அறிமுகமாகி உள்ளனர். இவர்கள் புதிதாக 'ஆன்லைன்' விற்பனை  மார்க்கெட் நிறுவனம் துவங்கியுள்ளதாகவும், அதில் முதலீடு செய்தால், அதிகம் லாபம் ஈட்டலாம் என ஆசை வார்த்தை கூறியுள்ளனர்.
இதன்படி, பிரியா, ஆனந்த், அஜீஸ் ஆகியோரின் வங்கி கணக்கில் 7.95 லட்சம் ரூபாய் செலுத்தியுள்ளார். ஆனால் லாபத் தொகை வராததால் பணத்தை திரும்பக் கேட்டுள்ளார். அவர்கள் தர மறுத்துள்ளனர்.
இதனால் விரக்தியடைந்த முனீஸ்வரன், கடந்த 19ம் தேதி எலி மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். ஓமந்துாரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முனீஸ்வரனிடம், திருவல்லிக்கேணி துணை கமிஷனர் விசாரணை நடத்தினார்.

