/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கணவன், மனைவி தகராறில் தீக்குளித்த விபரீதம்
/
கணவன், மனைவி தகராறில் தீக்குளித்த விபரீதம்
ADDED : ஆக 30, 2024 12:45 AM
ஆர்.கே.நகர், சென்னை, கொருக்குப்பேட்டை, ஜெ.ஜெ.நகரை சேர்ந்தவர் சபியுல்லா, 34. நகைப்பெட்டி செய்யும் தொழில் செய்கிறார். இவரது மனைவி மஸ்தானி, 30. இரு பெண் குழந்தைகள் உள்ளனர்.
கணவன், மனைவி இடையே பணம் தொடர்பாக தகராறில், இருவரும் சண்டையிட்டு கொண்டனர். மஸ்தானி கோபித்து கொண்டு, வீட்டில் இருந்த மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். தடுக்க முயன்ற கணவர் மீதும் தீ பற்றியது. இருவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து, இருவரையும் மருத்துவமனையில் சேர்த்தனர்.
மஸ்தானி 50 சதவீத தீக்காயத்துடன் கீழ்ப்பாக்கம் மருத்துவமனை தீவிர பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். சபியுல்லா, 45 சதவீத தீக்காயத்துடன் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
ஆர்.கே.நகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

