/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கடற்கரை - எழும்பூர் 4வது பாதையில் ரயில் இன்ஜின் இயக்கி சோதனை இம்மாத இறுதியில் பயன்பாட்டுக்கு வருகிறது

ADDED : மார் 07, 2025 12:10 AM

சென்னை, சென்னை எழும்பூர் - - கடற்கரை இடையே 4 கி.மீ., துாரத்திற்கு நான்காவது புதிய ரயில் பாதை பணி, 274.20 கோடி ரூபாய் மதிப்பில் 2023, ஆக., மாதம் துவங்கியது. நிலம் கையகப்படுத்துவதில் சிக்கல் இருந்ததால், பணியில் சுணக்கம் ஏற்பட்டது.
நிலம் கையகப்படுத்திய பின், ரயில் பாதை, சிக்னல் அமைப்பு மற்றும் மின் சாதனங்கள் நிறுவுதல் உள்ளிட்ட பணிகள் முடிந்தன.
இந்நிலையில், சென்னை கடற்கரை - எழும்பூர் வரை நான்காவது பாதையில், தெற்கு ரயில்வே முதன்மை தலைமை மின் பொறியாளர் சோமஸ்குமார் மற்றும் உயர் அதிகாரிகள், நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.
ரயில்களுக்கு மின்சாரம் வினியோகிக்கும் மேல்நிலை மின் கம்பிகளை ஆய்வு செய்தனர். இதையடுத்து, கடற்கரை -- எழும்பூர் இடையே நான்காவது பாதையில், ரயில் இன்ஜின் இயக்கி, சோதனை ஓட்டம் நடந்தது.
தெற்கு ரயில்வே முதன்மை தலைமை மின் பொறியாளர் சோமஸ்குமார் கூறியதாவது:
கடற்கரை - எழும்பூர் இடையே அமைக்கப்பட்டுள்ள புதிய ரயில் பாதை பயன்பாட்டிற்கு வந்ததும், எழும்பூரில் இருந்து கடற்கரை வழியாக வட மாநிலங்களுக்கு செல்லக்கூடிய ரயில்கள், அதிக அளவில் இயக்கப்படும்.
சென்ட்ரலில் இருந்து வட மாநிலங்களுக்கு, அதிக அளவில் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. வரும் நாட்களில், எழும்பூரில் இருந்தும் வட மாநில ரயில்கள் அதிக அளவில் இயக்க, இந்த பாதை பயனுள்ளதாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தென்மண்டல ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம்.சவுத்ரி, வரும் 9ம் தேதி, புதிய ரயில் பாதையில் ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.
அவரது ஆலோசனை மற்றும் ஒப்புதலுக்கு பின், இம்மாதம் இறுதிக்குள் இந்த புதிய ரயில் பாதை பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என, ரயில்வே அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.