/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மாற்றுத்திறனாளிகளை பராமரிக்க பயிற்சி
/
மாற்றுத்திறனாளிகளை பராமரிக்க பயிற்சி
ADDED : ஜூலை 12, 2024 12:37 AM
சென்னை,
கோட்டூர்புரத்தில் இயங்கிவரும் வித்யாசாகர் தொண்டு நிறுவனம், மாற்றுத்திறனாளிகள் இயக்குனரகத்துடன் இணைந்து, பராமரிப்பாளர் பயிற்சியை வழங்குகிறது. பயிற்சி காலம் மூன்று மாதம்.
இப்பயிற்சியில் சேர, 18 முதல் 35 வயதிற்கு உட்பட்டவராகவும், குறைந்தபட்சம் எட்டாம் வகுப்பும் படித்திருக்க வேண்டும். இருபாலரும் விண்ணப்பிக்கலாம். பயிற்சியின் போது 1,000 ரூபாய் ஊக்கத்தொகையும், 500 ரூபாய் போக்குவரத்து செலவிற்கும் வழங்கப்படும்.
பயிற்சிக்குப் பின், சான்றிதழ் வழங்கப்படும். தவிர 12,000 முதல் 20,000 ரூபாய் சம்பளத்தில் வேலையும் கிடைக்க வாய்ப்புள்ளது. ஆகஸ்ட் 1ம் தேதி பயிற்சிகள் துவங்க உள்ளன.
கூடுதல் விபரங்களுக்கு 94442 11954, 99625 14170 ஆகிய மொபைல்போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

