/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரயில்கள் ரத்தால் பஸ்களில் நெரிசல்
/
ரயில்கள் ரத்தால் பஸ்களில் நெரிசல்
ADDED : ஆக 17, 2024 12:19 AM

சென்னை, தாம்பரம் ரயில்வே யார்டில் மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருவதால், கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு தடத்தில், வரும் 18ம் தேதி வரை, 63 மின்சார ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளன. கடற்கரை - பல்லாவரம் இடையே மின்சார சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால், இந்த வழித்தட பேருந்துகளில் பயணியர் கூட்டம் அலைமோதியது.
'மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டாலும், போதுமானவையாக இல்லை. சிறப்பு பேருந்து எனக்கூறி வழக்கமான கட்டணத்தை விட, கூடுதலாக 5 - 7 ரூபாய் அதிகமாக வசூலிக்கின்றனர்' என, பேருந்து பயணியர் குற்றம்சாட்டினர்.
'மறைமலைநகர், பொத்தேரி, கூடுவாஞ்சேரி, வண்டலுார், தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம், கிண்டி வழியாக பிராட்வேக்கு வழக்கமாக செல்லும் மாநகர பேருந்துகளோடு, கூடுதலாக 70 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால், 25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் பேர், கூடுதலாக பயணம் செய்கின்றனர். சிறப்பு பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்க உத்தரவிடவில்லை. கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்' என,மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறினர்.

