/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஆந்திரா கனமழையால் பாதை சேதம் சீரமைப்பு பணியால் ரயில்கள் ரத்து
/
ஆந்திரா கனமழையால் பாதை சேதம் சீரமைப்பு பணியால் ரயில்கள் ரத்து
ஆந்திரா கனமழையால் பாதை சேதம் சீரமைப்பு பணியால் ரயில்கள் ரத்து
ஆந்திரா கனமழையால் பாதை சேதம் சீரமைப்பு பணியால் ரயில்கள் ரத்து
ADDED : செப் 04, 2024 02:25 AM
சென்னை:ஆந்திரா மாநிலத்தில் கனமழை பெய்து வருகிறது. விஜயவாடா - கூடூர் தடம், காஜிபேட் உள்ளிட்ட ரயில் பாதைகள், பாலங்கள் மற்றும் சில ரயில் நிலையங்கள் சேதமடைந்துள்ளன.
இவற்றை போர்க்கால அடிப்படையில் சீரமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.
இதனால், சென்ட்ரல் - புதுடில்லி உட்பட 20க்கும் மேற்பட்ட விரைவு ரயில்களின் சேவை நேற்றும் ரத்து செய்யப்பட்டன. இதுதவிர, சில ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டு வருகின்றன.
இதன்படி, தாம்பரம் - மேற்கு வங்க மாநிலம் சந்திரகாச்சி காலை 7:15 மணி, புதுச்சேரி - மேற்கு வங்கம் ஹவுரா மதியம் 2:15 மணி ரயில்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன.
புதுடில்லி - சென்ட்ரல் இரவு 9:05 மணி தமிழ்நாடு விரைவு ரயில் இன்று ரத்து செய்யப்பட்டுஉள்ளது.
கன்னியாகுமரி - ஹவுரா காலை 5:50 மணி, திருநெல்வேலி - மேற்கு வங்கம் புருலியா அதிகாலை 3:00 மணி ரயில்கள் வரும் 7ம் தேதி ரத்து செய்யப்பட்டுள்ளன.
தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், 'ரயில் பாதைகள், பாலங்கள் சீரமைப்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. அடுத்த ஓரிரு நாளில் ரயில் சேவை சீராகும் என எதிர்பார்க்கிறோம்' என்றனர்.