ADDED : ஆக 16, 2024 11:59 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை : கடற்கரை - எழும்பூர் இடையே வரும் 18, 19ம் தேதிகளில் இரவு 10:35 மணி முதல் அதிகாலை 4:35 மணி வரை ரயில் பாதை மேம்பாட்டு பணி நடக்க உள்ளது. இந்நேரங்களில் தாம்பரத்துக்கு வரும், புறப்படும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
திருமால்பூர், தாம்பரம், செங்கல்பட்டில் இருந்து கடற்கரைக்கு இயக்கப்படும் இரவு நேர ரயில்கள், எழும்பூர் வரை மட்டுமே இயக்கப்படும்.
கடற்கரையில் இருந்து இரவு 10:30 மணிக்கு மேல் அதிகாலை வரை புறப்படும் ரயில்கள், வரும் 18ம் தேதி எழும்பூரில் இருந்து செல்லும் என, தெற்கு ரயில் கோட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.