/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மத்திய குற்றப்பிரிவு உதவி கமிஷனர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

ADDED : ஆக 20, 2024 12:30 AM
சென்னை, சென்னை வேப்பேரியில் உள்ள, போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், மத்திய குற்றப்பிரிவு செயல்படுகிறது. அதில், சைபர் குற்றத்தடுப்பு, வேலை வாய்ப்பு, ஆவண மோசடி, நில மோசடி தடுப்பு, ரவுடிகள் ஒழிப்பு என, பல பிரிவுகள் செயல்படுகின்றன.
இப்பிரிவில் லஞ்சம் தலைவரித்து ஆடுகிறது, குற்றவாளிகளை கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்கவைக்க, தில்லுமுல்லு நடப்பதாக புகார் எழுந்தது.
சில நாட்களுக்கு முன், பொதுமக்களிடம் கமிஷனர் அருண் புகார் மனுக்கள் பெற்றார்.
அதில், மத்திய குற்றப்பிரிவு விசாரணைக்கு ஒதுக்கப்பட்ட புகார்கள் மீது விசாரணை நடத்தப்படாமல் உள்ளது. இதனால், மத்திய குற்றப்பிரிவு முடங்கி கிடப்பதாக குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டிருந்தன.
இது தொடர்பாக ஆய்வு நடத்தி வரும் கமிஷனர் அருண், குற்றச்சாட்டுகளில் சிக்குவோரை, பணியிட மாற்றமும் செய்து வருகிறார்.
அந்த வகையில், மத்திய குற்றப்பிரிவு ஆவண மோசடி தடுப்பு பிரிவு உதவி கமிஷனர் ஜான் விக்டரை காத்திருப்போர்பட்டியலுக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார்.
அதேபோல், மேலும், சில அதிகாரிகளை காவல் கட்டுப்பாட்டு அறை உள்ளிட்ட இடங்களுக்கும் பணியிட மாற்றம் செய்துள்ளார்.