/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பிளேடை விழுங்கிய ரவுடிக்கு சிகிச்சை
/
பிளேடை விழுங்கிய ரவுடிக்கு சிகிச்சை
ADDED : ஏப் 07, 2024 12:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, தேர்தலை முன்னிட்டு குற்ற பின்னணி உடைய ரவுடிகளை போலீசார் கண்காணித்து வருகின்றனர். நேற்று முன்தினம் தலைமைச் செயலக காலனி பகுதியை சேர்ந்த ரவுடி நவினா என்பவரை டீக்கடை ஒன்றின் அருகே பிடித்த போலீசார், அவரை புகைப்படம் எடுத்தனர். போலீசார் தொல்லை தருவதாகக்கூறி, நவினா தன் கையில் வைத்திருந்த பிளேடால் கழுத்தில் கீறிக் கொண்டார்.
போலீசார் தடுக்க முற்றபட்ட போது, பிளேடை விழுங்கி, 'என் சாவுக்கு போலீசார் தான் காரணம்' என சத்தம் போட்டார்.
அதிர்ச்சி அடைந்த போலீசார், நவினாவை மீட்டு கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

