/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நாகை கால்வாயை சீரமைத்த அறக்கட்டளை
/
நாகை கால்வாயை சீரமைத்த அறக்கட்டளை
ADDED : ஆக 13, 2024 01:05 AM

மடிப்பாக்கம், மடிப்பாக்கம், கார்த்தியேபுரத்தில், நீர்நிலை புனரமைப்பு இயக்க அறக்கட்டளை, 10 ஆண்டுகளாக இயங்கி வருகிறது.
இதன் உறுப்பினர்கள் இணைந்து, சென்னை மற்றும் சுற்றுப்புறத்தில் உள்ள ஏரிகளை துார் வாருதல் உள்ளிட்ட பணிகளை செய்கின்றனர்.
இவர்கள், நாகை மாவட்டம், கீழையூர்ஒன்றியம் தன்னிலைப்பாடி கிராமத்தில் புதர்மண்டி காணப்பட்ட கால்வாயை மீட்டுள்ளனர்.
மொத்தம் 6 கி.மீ., நீளம், 5 அடி அகலம் உள்ள கால்வாயை, அறக்கட்டளையினர் மற்றும் கிராமத்தினர் சேர்ந்து, ஒரு லட்சம் ரூபாய் செலவில், பொக்லைன் இயந்திரம் உதவியுடன் துார் வாரியுள்ளனர்.
இதனால், தன்னிலைப்பாடி மற்றும் சுற்றுப் பகுதியில் 300 ஏக்கர் விவசாய நிலத்திற்கு காவிரி கடைமடை நீர்வரத்து செல்ல வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது.