சென்னை, காலி மனை விற்பனை தொடர்பாக வாங்கிய 1.13 கோடி ரூபாயை திரும்ப தந்து விடுவதாக உறுதி அளித்ததால் விசாரணைக்கு அழைக்கப்பட்ட இருவர் விடுவிக்கப்பட்டனர்.
சென்னை, தரமணியைச் சேர்ந்த தேவராஜ்,42; செல்வகுமார், 43 ஆகியோர், சிந்தாதிரிப்பேட்டையைச் சேர்ந்த பாலசுப்பிரமணியம், 56 என்பவருக்கு காலி மனை விற்பதாக, 1.13 கோடி ரூபாய் வாங்கி உள்ளனர்.
பெண் ஒருவர் வாயிலாக, தாம்பரம், முத்தையா நகர், நன்மங்களம் பகுதியில் உள்ள, 2,600 சதுரடி நிலத்தை விற்றுள்ளனர். இது வேறு ஒருவருக்கு சொந்தமானது என, கூறப்படுகிறது. இது தொடர்பாக, பாலசுப்பிரமணியம், தாம்பரம் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து, தேவராஜ், செல்வகுமார் ஆகியோரை விசாரித்தனர். வாங்கிய பணத்தை திரும்ப ஒப்படைத்துவிடுவதாக இருவரும் உறுதி அளித்ததால் சிறைக்கு அனுப்பப்படாமல் விடுவிக்கப்பட்டனர்.

