/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வீட்டில் கஞ்சா பதுக்கி விற்ற இருவர் கைது
/
வீட்டில் கஞ்சா பதுக்கி விற்ற இருவர் கைது
ADDED : மார் 09, 2025 01:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோயம்பேடு, கோயம்பேடு பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக வந்த தகவலையடுத்து கோயம்பேடு போலீசார் நெற்குன்றம், செல்லியம்மன் நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நேற்று சோதனை செய்தனர்.
அங்கு கஞ்சா பதுக்கி விற்பனை செய்வது தெரியவந்தது. இதையடுத்து அந்த வீட்டில் தங்கியிருந்த கொளத்தூரை சேர்ந்த விஜய், 27, மதுரவாயலை சேர்ந்த சிவா, 24 ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து 5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை செய்தனர்.
விசாரணையில் வீடு வாடகைக்கு எடுத்து கல்லுாரி மாணவர்களை குறி வைத்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.