/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரூ.57 லட்சம் 'டிரேடிங்' மோசடி பெண் உட்பட இருவர் கைது
/
ரூ.57 லட்சம் 'டிரேடிங்' மோசடி பெண் உட்பட இருவர் கைது
ரூ.57 லட்சம் 'டிரேடிங்' மோசடி பெண் உட்பட இருவர் கைது
ரூ.57 லட்சம் 'டிரேடிங்' மோசடி பெண் உட்பட இருவர் கைது
ADDED : ஆக 01, 2024 12:56 AM

ஆவடி, கொரட்டூரைச் சேர்ந்தவர் ரவீந்தர் பரீக், 53; தனியார் நிறுவன ஊழியர். இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், 'ஸ்டாக் மார்க்கெட் டிரேடிங்' தொடர்பாக வந்த விளம்பரத்தை பார்த்து, அதில் குறிப்பிட்ட எண்ணில் தொடர்பு கொண்டார்.
அதில் பேசிய நபர், 'ஸ்டாக் மார்க்கெட்டில் முதலீடு செய்தால் நல்ல லாபம் கிடைக்கும்' என, ஆசைவார்த்தை கூறியுள்ளார்.
அதன்படி, அவர்கள் கொடுத்த வங்கி கணக்கில், ரவீந்தர் பரீக், 57.44 லட்சம் ரூபாய் 'டிபாசிட்' செய்துள்ளார். அதன்பின், முதலீடு செய்த பணம், கமிஷன் தொகையை தராமல் ஏமாற்றிஉள்ளனர்.
இது குறித்து விசாரித்த ஆவடி மத்திய சைபர் கிரைம் போலீசார், மோசடி கும்பலுக்கு ஏஜன்டாக செயல்பட்ட பெரம்பூரைச் சேர்ந்த பரிதா, 38, மற்றும் கோடம்பாக்கத்தைச் சேர்ந்த கண்ணன், 54, ஆகியோரை கைது செய்து, நேற்று சிறையில் அடைத்தனர்.
இந்த கும்பல், ஏராளமானோரை ஏமாற்றி பல கோடி ரூபாய் சுருட்டியது விசாரணையில் தெரிய வந்துள்ளது.