/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
23 கிரவுண்ட் மோசடி வழக்கு மேலும் இருவர் சிக்கினர்
/
23 கிரவுண்ட் மோசடி வழக்கு மேலும் இருவர் சிக்கினர்
ADDED : மே 31, 2024 12:46 AM

சென்னை, சைதாப்பேட்டை சார்-பதிவாளர், சென்னை மத்திய குற்றப்பிரிவில் புகார் ஒன்றை அளித்து இருந்தார்.
அதில், திருவான்மியூர் கல்கி கிருஷ்ணமூர்த்தி சாலையிலுள்ள, 23 கிரவுண்ட் இடத்திற்கு, போலி ஆவணங்கள் தயார் செய்து விற்பனை செய்ய முயன்ற கமலக்கண்ணன் என்பவர் மீது, நடவடிக்கை எடுக்கும்படி கோரியிருந்தார்.
மத்திய குற்றப்பிரிவு தனிப்படை போலீசார் விசாரணையில், ராஜசேகர் அளித்த புகார் உண்மை என தெரிந்தது. தொடர்ந்து கமலக்கண்ணனை கைது செய்த போலீசார், அவர் அளித்த தகவலின்படி, சுரேஷ்குமார், யுவராஜ் சவுத்ரி ஆகிய இருவரை தேடி வந்தனர்.
இந்நிலையில், படப்பையைச் சேர்ந்த சுரேஷ்குமார், 41, யுவராஜ் சவுத்ரி, 56, ஆகிய இருவரை, நேற்று கைது செய்தனர். மேலும், போலி ஆவணம் தயார் செய்த, கோடம்பாக்கத்தில் உள்ள ராசி கிராபிக்ஸ் என்ற அலுவலகத்தில் சோதனை நடத்தி கணிணி, போலி ரப்பர் ஸ்டாம்பு உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.