/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வியாபாரியிடம் கைவரிசை இருவர் சிக்கினர்
/
வியாபாரியிடம் கைவரிசை இருவர் சிக்கினர்
ADDED : ஆக 18, 2024 12:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை,புரசைவாக்கம், வைகோகாரன் தெருவைச் சேர்ந்தவர் சண்முகம், 69. பிராட்வேயில் இரும்பு வியாபாரம் செய்கிறார். இந்நிலையில் கடந்த, 12ம் தேதி இரவு புரசைவாக்கம் தானா தெருவில் உள்ள, நாட்டு மருந்து கடையில் பொருட்கள் வாங்கச் சென்றார். அப்போது பணம், மொபைல்போன் அடங்கிய கைப்பையை இருவர் திருடி தப்பினர்.
போலீசார், கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியை வைத்து விசாரணை மேற்கொண்டனர். இதில், ராஜமங்கலத்தைச் சேர்ந்த ஜார்ஜ் புஷ், 30, திருமங்கலத்தைச் சேர்ந்த ஹரிபிரசாத், 38 ஆகிய இருவரும் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. நேற்று இருவரை போலீசார் கைது செய்தனர்.

