/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'ஏர் சிலிண்டர்' வெடித்து விபத்து இருவர் 'அட்மிட்'
/
'ஏர் சிலிண்டர்' வெடித்து விபத்து இருவர் 'அட்மிட்'
ADDED : மே 20, 2024 01:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆவடி:ஆவடி அடுத்த காட்டூர், மகளிர் தொழிற்பேட்டையில் 'ஸ்வாதி என்டர்பிரைசஸ்' என்ற பெயரில், கிரேன் உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனம் செயல்படுகிறது.
'கிரேன் சர்வீஸ்' செய்யும் பணியில், 'பிட்டர்' சுரேஷ், 50, உதவியாளர் முரளி கிருஷ்ணன், 43, ஆகியோர், நேற்று முன்தினம் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, எதிர்பாராத விதமாக சிறிய 'ஏர் சிலிண்டர்' ஒன்று வெடித்து சிதறியது. இதில், சுரேஷ் மற்றும் முரளி கிருஷ்ணனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
உடனிருந்த சக ஊழியர்கள் அவர்களை மீட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து, ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் விசாரிக்கின்றனர்.

