/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
புதையல் தங்கம் என நுாதன மோசடி கடைக்காரரை ஏமாற்றிய இருவர் கைது
/
புதையல் தங்கம் என நுாதன மோசடி கடைக்காரரை ஏமாற்றிய இருவர் கைது
புதையல் தங்கம் என நுாதன மோசடி கடைக்காரரை ஏமாற்றிய இருவர் கைது
புதையல் தங்கம் என நுாதன மோசடி கடைக்காரரை ஏமாற்றிய இருவர் கைது
ADDED : ஆக 12, 2024 03:41 AM
சென்னை,:மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்தவர் குமாரசுவாமி, 59; மளிகை கடை வைத்துள்ளார். கடந்த 14ம் தேதி, அவரது கடைக்கு வந்த மர்ம நபர், தேங்காய் எண்ணெய், சோப்பு வாங்கியுள்ளார்.
அதற்கான பணம் தரும்போது, சில வெள்ளி நாணயங்களை கொடுத்துள்ளார். அது குறித்து கேட்டபோது, தான் கூலி வேலை செய்வதாகவும், ஓரிடத்தில் பள்ளம் தோண்டும்போது வெள்ளி, தங்க நாணயங்கள், தங்கச்செயின் அடங்கிய புதையல் கிடைத்ததாகவும் கூறியுள்ளார்.
தங்கம் வேண்டுமென்றால் அழைக்கும்படி, அவரது மொபைல் போன் எண்ணையும் கடைக்காரரிடம் தந்துள்ளார்.
அந்த எண்ணை தொடர்பு கொண்டபோது, முதலில் இரு தங்கச்செயினை மர்ம நபர் தந்துள்ளார். கடைக்காரர் குமாரசாமி, அந்த செயினை அடகு கடையில் சோதித்த போது, உண்மையான தங்கம் என தெரிந்தது.
இதையடுத்து, மர்ம நபரிடம் நகைகள் நிறைய வாங்க வேண்டும் என்ற ஆசையில், 5 லட்சம் ரூபாயை, குரோம்பேட்டை ரயில் நிலையம் அருகே, கடந்த 24ம் தேதி, குமாரசாமி தந்துள்ளார். பணத்தை பெற்ற மர்ம நபர், ஏராளமான நகைகளை கொடுத்து அனுப்பினார்.
இதற்கிடையே, இதுபோல் ஒரு சம்பவத்தில், போலி நகைகளை கொடுத்து, ஒருவரை ஏமாற்றியதாக, தாம்பரம் போலீசார் ஒரு பெண்ணை கைது செய்தனர்.
இந்த செய்தியை அறிந்த குமாரசாமி, மர்ம நபரிடம் வாங்கிய நகைகளை பரிசோதித்து பார்த்த போது, அனைத்து நகைகளும் போலி என்பது தெரிந்தது.
இதையடுத்து, தான் ஏமாந்தது குறித்து, குரோம்பேட்டை காவல் நிலையத்தில், கடைக்காரர் குமாரசாமி கடந்த 28ல் புகார் அளித்தார்.
இந்நிலையில், குரோம்பேட்டை ரயில் நிலையம் அருகே, ரோந்து பணியில் இருந்த போலீசார், அங்கு நின்ற இருவரை பிடித்து விசாரித்தனர்.
அவர்கள், முன் பின் முரணாக பதிலளிக்கவே, அவர்களிடமிருந்த பையை வாங்கி சோதனை செய்தனர். அதில் 3 போலி தங்க செயின்கள், 30,000 ரூபாய், ஒன்பது மொபைல் போன்கள் இருந்தன.
தீர விசாரித்ததில், கர்நாடகாவைச் சேர்ந்த பாபுலால், 36, ராகுல், 23, என்பதும், மளிகை கடைக் காரர் குமாரசுவாமியிடம், போலி நகைகளை கொடுத்து ஏமாற்றியது இவர்கள் தான் என்பதும் உறுதியானது.
வழக்கு பதிவு செய்து, இருவரையும் கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி, அவர்களை சிறையில் அடைத்தனர்.