/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
2 பைக் மீது பஸ் மோதல் வாலிபர்கள் இருவர் பலி
/
2 பைக் மீது பஸ் மோதல் வாலிபர்கள் இருவர் பலி
ADDED : ஏப் 30, 2024 12:42 AM

கூடுவாஞ்சேரி,கூடுவாஞ்சேரி அடுத்த மாடம்பாக்கத்தைச் சேர்ந்தவர் மேகராஜ், 30. இவர், நேற்று முன்தினம் இரவு 11:30 மணிக்கு, கூடுவாஞ்சேரியில் இருந்து தாம்பரம் நோக்கி, 'ராயல் என்பீல்ட் புல்லட்' இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
கூடுவாஞ்சேரி மின் வாரிய அலுவலகம் அருகே, பின்னால் வேகமாக வந்த தனியார் தொழிற்சாலை பேருந்து கட்டுப்பாட்டை இழந்து, முன்னே சென்ற 'புல்லட்' பைக் மற்றும் மற்றொரு கே.டி.எம்., பைக் மீது மோதியது. இந்த விபத்தில், தலையில் அடிபட்ட மேகராஜ், சம்பவ இடத்திலேயே பலியானார்.
கே.டி.எம்., பைக்கில் வந்த இருவரில், மாடம்பாக்கத்தைச் சேர்ந்த சந்தோஷ்குமார், 26, என்பவரும், அங்கேயே இறந்தார்.
அவருடன் வந்த பிரபாகரன், 31, என்பவர், உயிருக்கு ஆபத்தான நிலையில், மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் வாயிலாக அனுப்பி வைக்கப்பட்டார்.
தாம்பரம் போலீசார் விபத்திற்கு காரணமான தனியார் தொழிற்சாலை பேருந்து ஓட்டுனர் ஏழுமலை, 55, என்பவரை கைது செய்தனர்.

