/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
யு - 16 கிரிக்கெட் போட்டி செயின்ட் பீட்ஸ் 'சாம்பியன்'
/
யு - 16 கிரிக்கெட் போட்டி செயின்ட் பீட்ஸ் 'சாம்பியன்'
யு - 16 கிரிக்கெட் போட்டி செயின்ட் பீட்ஸ் 'சாம்பியன்'
யு - 16 கிரிக்கெட் போட்டி செயின்ட் பீட்ஸ் 'சாம்பியன்'
ADDED : ஏப் 27, 2024 12:26 AM

சென்னை, தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் ஆதரவுடன், தாகூர் கல்விக் குழுமம் சார்பில், நகர பள்ளிகள் இடையிலான கிரிக்கெட் போட்டிகள் ஏப்., 16ல் துவங்கின. 40 அணிகள் பங்கேற்ற போட்டிகள் நடந்தது. வண்டலுார் அடுத்த ரத்தினமங்கலம் தாகூர் மருத்துவக் கல்லுாரி மைதானத்தில் நடந்தன.
கொளப்பாக்கம் லால்ஜி நினைவு பள்ளி அணியும், சாந்தோம் செயின்ட் பீட்ஸ் பள்ளி அணியும் இறுதிப் போட்டிக்கு முன்னேறின.
இதில், முதலில் களமிறங்கிய செயின்ட் பீட்ஸ் பள்ளி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 219 ரன்கள் எடுத்தது. பிரபஞ்சன் 73 பந்துகளில் 82 ரன்கள் குவித்தார்.
பின்னர் களமிறங்கிய லால்ஜி அணியை, ரஜத் ரங்கராஜன், கவின் ஆகியோரின் ஆட்டம் வெற்றி நோக்கி அழைத்துச் சென்றது. ரஜத் 64 ரன்களிலும், கவின் 56 ரன்களிலும் ஆட்டமிழக்க, பின் வந்த வீரர்கள் ரன் எடுக்க தடுமாறினர்.
இதனால் லால்ஜி அணி 50 ஓவர் முடிவில் எட்டு விக்கெட் இழந்து 213 ரன்கள் மட்டுமே எடுத்து. தோல்வியடைந்தது.
சாம்பியன் பட்டம் வென்ற செயின்ட் பீட்ஸ் பள்ள அணிக்கு, தாகூர் கல்வி நிறுவனங்களின் தலைவர் மாலா, தாகூர் கல்வி அறக்கட்டளை செயலர் மணிகண்டன் ஆகியோர் கோப்பை மற்றும் சான்றிதழ்களை வழங்கினர்.

