/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மழை பாதிப்பு எதிர்கொள்ள தயார்படுத்திய உதயநிதி
/
மழை பாதிப்பு எதிர்கொள்ள தயார்படுத்திய உதயநிதி
ADDED : செப் 05, 2024 12:54 AM
சென்னை, சென்னை மாநகராட்சியில், வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள், வெள்ள தடுப்பு தொடர்பாக, இதர துறைகளின் ஒருங்கிணைப்பு ஆய்வு கூட்டம், நேற்று ரிப்பன் மாளிகையில் நடந்தது.
இதில், விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி பேசியதாவது:
கடந்த ஆய்வு கூட்டத்தில் விவாதித்த தொகுப்பை, முதல்வரிடம் சமர்ப்பித்துள்ளோம்.
சாலையில் தேங்கும் மழைநீரை வெளியேற்ற, போதிய எண்ணிக்கையில் நீர் இறைக்கும் மோட்டார்களை, தயார் நிலையில் வைக்க வேண்டும்.
தாழ்வான பகுதியிலுள்ள மக்களை மீட்டு தங்க வைக்க, நிவாரண மையங்கள் தயாராக இருப்பதை, இப்போதே உறுதி செய்ய வேண்டும். குடிநீர், பாய், போர்வை உள்ளிட்ட தேவைகளை, மழைக்கு முன்பே தயாராக வைத்திருப்பது அவசியம்.
வடிகால், கால்வாய், வடிகட்டி தொட்டிகளில் அடைப்புகளை அகற்ற வேண்டும். மழைக்காலத்தில் மின்வாரியத்தினர், விழிப்புடன் பணியாற்ற வேண்டும்.
அதிகாரிகள் ஆய்வுக்கு செல்லும் போது, மக்கள் பிரதிநிதிகளை அழைத்துச் செல்ல வேண்டும். சென்னையை பொறுத்தவரை மழைக்காலங்களில் முன்னெச்சரிக்கை பணிகளுக்கு முன்னுரிமை அளித்து, நிதி ஒதுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.