/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
உலகளந்த பெருமாள் கோவில் மஹா கும்பாபிேஷகம் கோலாகலம்
/
உலகளந்த பெருமாள் கோவில் மஹா கும்பாபிேஷகம் கோலாகலம்
உலகளந்த பெருமாள் கோவில் மஹா கும்பாபிேஷகம் கோலாகலம்
உலகளந்த பெருமாள் கோவில் மஹா கும்பாபிேஷகம் கோலாகலம்
ADDED : ஆக 29, 2024 12:38 AM

காஞ்சிபுரம், காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் கோவிலில், நேற்று காலை 10:30 மணிக்கு மேல், 11:30 மணிக்குள் கோவிலில் உள்ள ஆரணவல்லி தாயார் சன்னிதி, ஊரகத்தான், காரகத்து பெருமாள்.
மேலும், நீரகத்து பெருமாள், கார்வானப்பெருமாள், ராஜகோபுரம், மூலவர் கோபுர விமான கலசம் ஆகியவற்றுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டு மஹா கும்பாபிஷேகம் நடத்தி வைக்கப்பட்டது.
தொடர்ந்து வேதபிரபந்த சாற்றுமறை நடந்தது. ஸ்ரீதேவி, பூதேவியருடன் உற்சவர் உலகளந்த பெருமாள் மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மாலை 6:30 மணிக்கு சுவாமி வீதியுலா நடந்தது.
மஹா கும்பாபிஷேகம் விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் சா.சி.ராஜமாணிக்கம், பரம்பரை அறங்காவலர்கள் கோ.க.வா.அப்பன் அழகிய சிங்கர், கோமடம் ரவி.
மேலும், போரகத்தி பட்டர் ரகுராம், கோவில் பட்டாச்சாரியார்கள், கைங்கர்யபரர்கள், கோவில் பணியாளர்கள் மற்றும் பக்தர்கள் இணைந்து செய்திருந்தனர்.
விழாவில் காஞ்சிபுரம் ஹிந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் குமரதுரை, உதவி ஆணையர் கருணாநிதி, குன்றத்துார் பூஜா எஸ்டேட் ப்ராபர்டீஸ் சம்பந்தம் தனசேகரன், சென்னை ஸ்ரீகிருஷ்ணா குரூப் ஆப் கம்பெனி சேர்மன் மற்றும் மேனேஜிங் டைரக்டர் பா.சக்தீஸ்வரன், பல்வேறு கோவில் செயல் அலுவலர்கள், மாநகராட்சி மேயர் மஹாலட்சுமி உட்பட பலர் பங்கேற்றனர்.

