/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
உள்வாங்கிய சாலை: கிண்டியில் வாகன நெரிசல்
/
உள்வாங்கிய சாலை: கிண்டியில் வாகன நெரிசல்
ADDED : ஆக 15, 2024 12:29 AM

அடையாறு, அடையாறு, மத்திய கைலாஷ் சந்திப்பில், 'எல்' வடிவிலான மேம்பாலம் கட்டும் பணி நடக்கிறது. இதற்காக, ஓ.எம்.ஆர்., மையப்பகுதியில் துாண் அமைக்கப்படுகிறது.
இந்நிலையில், சர்தார் பட்டேல் சாலை மைய பகுதியில் நேற்று, 5 அடி ஆழத்தில் சாலை உள்வாங்கி, பள்ளம் விழுந்தது.
அருகில், கிரீன்வேஸ் சாலையில் இருந்து, பெருங்குடி சுத்திகரிப்பு நிலையம் நோக்கி செல்லும், 1,000 விட்டம் உடைய கழிவுநீர் குழாய் பதிக்கப்பட்டுள்ளது. அதில், ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டு சாலை உள்வாங்கியதா என, குடிநீர் வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
பள்ளம் விழுந்த இடத்திற்கும் குழாய் பதிப்பு இடத்திற்கும் நடுவே 20 அடி துாரம் இருப்பதால், அதனால் பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை என தெரிந்தது. தொடர்ந்து, நெடுஞ்சாலைத் துறை சார்பில் பள்ளத்தை மூடும் பணி துவங்கியது.
கிண்டியில் இருந்து ஓ.எம்.ஆர்., நோக்கி மற்றும் அடையாறில் இருந்து கிண்டி நோக்கி செல்லும் சாலைகளில், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.