ADDED : ஏப் 08, 2024 01:06 AM
பூந்தமல்லி:சென்னை- - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், பூந்தமல்லி அருகே உள்ள நசரத்பேட்டையில் தேர்தல் பறக்கும் படையினர் நேற்று, வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, வெள்ளவேடு பகுதியைச் சேர்ந்த ராம் லால் என்பவர், உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துவந்த 2 லட்சம் ரூபாயை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து பூந்தமல்லியில் உள்ள அரசு கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
கொடுங்கையூர், பெரம்பூர் பாபா ரியல் எஸ்டேட் அருகே, திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த ஸ்ரீதர், 54, என்பவர் ஆவணமின்றி எடுத்துச் சென்ற 1 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
தண்டையார்பேட்டை, சிவாஜி நகரை சேர்ந்த செல்வராஜ், 44, 1.12 லட்சம் ரூபாய் எடுத்து சென்றார். திருவொற்றியூர், டோல்கேட்டை சேர்ந்த கோமதிநாதன், 40, என்பவர், 1.07 லட்சம் ரூபாய் எடுத்து சென்றார். இருவரது பணத்தையும், உரிய ஆவணம் இல்லாமல் எடுத்து வந்ததாக, தண்டையார்பேட்டை தேர்தல் அதிகாரிகள் நேற்று பறிமுதல் செய்தனர்.

