/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அகற்றப்படாத சாய்வு தளம் பாதசாரிகள் அதிருப்தி
/
அகற்றப்படாத சாய்வு தளம் பாதசாரிகள் அதிருப்தி
ADDED : ஆக 06, 2024 01:13 AM

தேனாம்பேட்டை மண்டலத்திற்கு உட்பட்ட ஆயிரம் விளக்கில், கிரீம்ஸ் சாலை உள்ளது. இச்சாலையில் கடந்த, 20ம் தேதி, நடைபாதை ஆக்கிரமிப்பு கடைகள் மற்றும் கட்டமைப்புகளை, மாநகராட்சியினர் இடித்து அகற்றினர். ஆனால், நடைபாதையில் வாகனம் நிறுத்துவதற்காக ஆக்கிரமிப்பாளர்கள் அமைத்த சாய்வு தளத்தை அகற்றவில்லை. இதனால், பாதசாரிகள் நடைபாதையை பயன்படுத்த முடியாமல், விபத்து ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில், சாலையில் நடந்து செல்கின்றனர்.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியமாக உள்ளனர்.
எனவே, சாய்வு தளத்தை இடித்து அகற்றவும், மேலும் நடைபாதையை ஆக்கிரமித்து வாகனங்கள் நிறுத்தாத வகையில் தடுப்புகள் அமைக்கவும், மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.