ADDED : ஜூலை 12, 2024 12:52 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தண்டையார்பேட்டை, ஜூலை 12-
தண்டையார்பேட்டை மண்டலம், சேணியம்மன் கோவில் தெரு பகுதியில், கடந்த 7ம் தேதி, மூன்றாம் வகுப்பு படிக்கும் மாணவர் கவுரிநாத் என்பவரை, தெருநாய் கடித்தது.
இது குறித்து, நம் நாளிதழில் செய்தி வெளியானது.
இதை தொடர்ந்து, நேற்று காலை, 42வது வார்டுக்கு உட்பட்ட சேணியம்மன் கோவில் தெரு, திலகர் குடியிருப்பு, சுனாமி குடியிருப்பு, ரெட்டை குழி தெரு உள்ளிட்ட பகுதிகளில், தெரு நாய்களுக்கு தடுப்பூசி போடும் பணி நடந்தது.
கால்நடை மருத்துவர்கள் மகேஸ்வரன், பரத் ஆகியோருடன், 10க்கும் மேற்பட்ட ஊழியர்கள், 100க்கும் மேற்பட்ட நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தினர். தடுப்பூசி போடப்பட்ட நாய்களுக்கு அடையாளமாக, வண்ணம் பூசப்பட்டது.

