/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சுட்டெரிக்கும் வெயிலில் தகிக்கும் வள்ளலார் நகர் பஸ் நிலையம்
/
சுட்டெரிக்கும் வெயிலில் தகிக்கும் வள்ளலார் நகர் பஸ் நிலையம்
சுட்டெரிக்கும் வெயிலில் தகிக்கும் வள்ளலார் நகர் பஸ் நிலையம்
சுட்டெரிக்கும் வெயிலில் தகிக்கும் வள்ளலார் நகர் பஸ் நிலையம்
ADDED : மே 08, 2024 12:04 AM

மின்ட், ராயபுரம் மண்டலத்தில், வள்ளலார் நகர் பேருந்து நிலையம் உள்ளது. இந்த பேருந்து நிலையத்தில் இருந்து, மாதவரம், திருவொற்றியூர், மணலி புதுநகர், கொடுங்கையூர், கே.கே.நகர், அய்யப்பன் தாங்கல், திருவேற்காடு உள்ளிட்ட பகுதிகளிலும் தினமும் நுாற்றுக்கணக்கான பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இதனால், பேருந்து நிலையத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். அந்த பேருந்து நிலையத்தில், கழிப்பறை, குடிநீர், பயணியர் அமர போதிய இருக்கை வசதிகள் இல்லை. கடும் வெயிலில் பெண்கள், முதியவர்கள், குழந்தைகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
இது குறித்து பயணியர் கூறியதாவது:
பெயரளவிற்கு மட்டுமே வள்ளலார் நகர் பேருந்து நிலையம். ஆனால், பேருந்து நிறுத்தத்தில் உள்ள இருக்கை வசதி இல்லை. அதேபோல, கழிப்பறை, குடிநீர் உள்ளிட்ட வசதிகளும் இல்லை. மேலும், நுழைவாயிலை மறைத்து காத்திருக்கும் ஆட்டோ மற்றும் ேஷர் ஆட்டோக்களால், பேருந்துகள் வெளியே செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது.
இதனால், அடிக்கடி விபத்துகளும், தகராறுகளும் ஏற்படுகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.

