/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வண்டலுார் பூங்கா வரும் 9ல் இயங்கும்
/
வண்டலுார் பூங்கா வரும் 9ல் இயங்கும்
ADDED : ஏப் 06, 2024 12:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாம்பரம், வண்டலுார் உயிரியல் பூங்காவில், 1,500க்கும் மேற்பட்ட விலங்குகள் பராமரிக்கப்படுகின்றன. வார நாட்களில், 15 - 20 பேர், பூங்காவை கண்டு ரசிக்கின்றனர். விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும். பராமரிப்பு பணி காரணமாக, வாரந்தோறும் செவ்வாய்கிழமை பூங்காவிற்கு விடுமுறை விடப்படுகிறது.
அன்று, பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை.
இந்த நிலையில், வார விடுமுறை தினமான, ஏப்., 9ம் தேதி, தெலுங்கு புத்தாண்டு தினமாகும். இதனால், பார்வையாளர்களின் வசதிக்காக, அன்று பூங்கா திறந்திருக்கும்.

