/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வருவாய் துறை இடத்தில் அத்துமீறும் வாகனங்கள்
/
வருவாய் துறை இடத்தில் அத்துமீறும் வாகனங்கள்
ADDED : மே 13, 2024 01:50 AM

திருநின்றவூர்:ஆவடி அடுத்த திருநின்றவூர், 12வது வார்டில் ஸ்ரீதேவி நகர் பிரதான சாலை உள்ளது. நெமிலிச்சேரி ரயில் நிலையம் செல்லும் இந்த சாலையில், மாவட்ட வருவாய் துறைக்கு சொந்தமான நிலம் ஆக்கிரமிப்பில் இருந்தது.
கடந்த ஆண்டு நிலத்தை மீட்ட மாவட்ட வருவாய்த்துறையினர், அந்த இடம் வருவாய் துறைக்கு சொந்தமானது என, அறிவிப்பு பதாகை வைத்தது.
அந்த அறிவிப்பு பதாகையை கண்டுகொள்ளாத பலரும், அந்த இடத்தில் வாகனங்களை நிறுத்தி வருகின்றனர். மர்ம நபர்கள், சமூக விரோத செயல்கள் செய்ய புகலிடமாகவும் மாறி வருகின்றன.
சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீசார், அரசு நிலத்தில் நடக்கும் அத்துமீறலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.