/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கூடைப்பந்தில் வேலம்மாள் பள்ளி 'சாம்பியன்'
/
கூடைப்பந்தில் வேலம்மாள் பள்ளி 'சாம்பியன்'
ADDED : ஆக 05, 2024 01:00 AM
சென்னை, ஆக. 5-
திருவள்ளூர் மாவட்டம், கவரைப்பேட்டையில் உள்ள, ஆர்.எம்.கே., சீனியர் பள்ளி சார்பில், மஞ்சுளா முனிரத்னம் நினைவு கோப்பைக்கான, பள்ளிகள் இடையிலான விளையாட்டுப் போட்டிகள், இரு நாட்கள் நடந்தன. 41 பள்ளிகளிலிருந்து, 700 வீரர்கள் பங்கேற்றனர்.
பேட்மின்டன், கால்பந்து, டென்னிஸ், வாட்டர் போலோ, நீச்சல் என பல போட்டிகள், 13, 15 மற்றும் 17 ஆகிய வயதினருக்கு நடத்தப்பட்டன.
இதில், 17 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான கூடைப்பந்தில் பெரவள்ளூர் டான் பாஸ்கோ பள்ளியும், முகப்பேர் வேலம்மாள் பள்ளியும் இறுதி போட்டிக்கு முன்னேறின.
வேலம்மாள் பள்ளி அணி வீரர்கள் துடிப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, 54 --- 44 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்று, சாம்பியன் பட்டம் வென்றனர்.
ஆண்களுக்கான கால்பந்து போட்டியில், ஜி.எம்.டி.டி.வி., பள்ளி சாம்பியன் பட்டம் வென்றது.