/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'விநாயகா மிஷன்' பல்கலை விளையாட்டு போட்டி துவக்கம்
/
'விநாயகா மிஷன்' பல்கலை விளையாட்டு போட்டி துவக்கம்
ADDED : ஜூன் 25, 2024 12:55 AM

சென்னை, விநாயகா மிஷனின் சென்னை வளாகத்தின் அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையின் நுண்கலை அமைப்பு மற்றும் மாணவ பேரவை அமைப்பின் சார்பில், ஆண்டு விளையாட்டு விழா, பையனுார் விளையாட்டு மைதானத்தில் வேந்தர் கணேசனின் வழிகாட்டுதலுடன் துவங்கியது.
நிகழ்ச்சிக்கு துறையின்டீன் செந்தில்குமார் முன்னிலை வகிக்க, சென்னை வளாக பொறுப்பு இயக்குனர் முத்துராஜ் வரவேற்றார்.
நிகழ்ச்சியில், இந்தியமகளிர் கால்பந்து அணியின் கேப்டனும், துணை காவல் ஆய்வாளருமான இந்துமதி கதிரேசன், விளையாட்டினால் தான் அடைந்த நன்மைகளையும், பெற்ற விருதுகளையும் குறித்து பேசினார்.
நிகழ்ச்சி, அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையின் தேசிய மாணவர் படை அணிவகுப்பு, ஒலிம்பிக் தீச்சுடர், கொடி ஏற்றம், புறா பறக்க விடுதல், உறுதிமொழி ஏற்பு உள்ளிட்ட நிகழ்வுகளுடன் துவங்கியது.
இதில், உடற்கல்வி இயக்குனர் விக்னேஷ், நுண்கலை அமைப்பு ஆலோசகர்கள் ஜீவா, ஜெயஸ்ரீ, பையனுார் ஊர் தலைவர் முத்துகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.