/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பேட்மின்டனில் முதலிடம் பிடித்த விருகம்பாக்கம் ஏ.வி.எம்., பள்ளி
/
பேட்மின்டனில் முதலிடம் பிடித்த விருகம்பாக்கம் ஏ.வி.எம்., பள்ளி
பேட்மின்டனில் முதலிடம் பிடித்த விருகம்பாக்கம் ஏ.வி.எம்., பள்ளி
பேட்மின்டனில் முதலிடம் பிடித்த விருகம்பாக்கம் ஏ.வி.எம்., பள்ளி
ADDED : நவ 09, 2024 12:49 AM

சென்னை, தமிழக அரசின் பள்ளிக்கல்வித் துறை சார்பில், வருவாய் மாவட்ட அளவிலான பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடக்கின்றன.
அந்த வகையில், தி.நகரில் உள்ள ஜி.ஆர்.டி., பள்ளி சார்பில், வருவாய் மாவட்ட அளவிலான பேட்மின்டன் போட்டிகள், கீழ்ப்பாக்கம், நேரு பார்க் மைதானத்தில் நடந்தன.
இதில், 14, 17 மற்றும் 19 வயதுக்கு உட்பட்ட மூன்று பிரிவுகளில், தனிநபர் மற்றும் இரட்டையர் ஆகிய பிரிவுகளில் 200க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் பங்கேற்றனர்.
மாணவருக்கான 14 வயது பிரிவில், ஒற்றையர் மற்றும் இரட்டையர் ஆகிய இரு பிரிவிலும், அண்ணா நகர் எஸ்.பி.ஓ.ஏ., பள்ளி, முதலிடங்களை பிடித்து அசத்தியது.
அதேபோல், 17 வயது பிரிவில், தனிநபரில் அண்ணா நகர் செயின்ட் ஜார்ஜ் பள்ளியும், இரட்டையரில் முகப்பேர் அவர் ஏஞ்சல் பள்ளியும், முதலிடங்களை கைப்பற்றின.
தனிநபர் 19 வயது பிரிவில், அம்பத்துார் சேது பாஸ்கரா பள்ளியும், அதேபிரிவில் இரட்டையரில், வேளாங்கண்ணி பள்ளியும் முதலிடங்களை பிடித்தன.
மாணவியரில், 14 வயதில் தனிநபரில் ஸ்ரீ சங்கரா பள்ளியும், இரட்டையரில் புரசைவாக்கம் சி.எஸ்.ஐ., பள்ளியும்; 17 வயதில் தனிநபரில் முகப்பேர் வேலம்மாள் பள்ளியும், இரட்டையரில் விருகம்பாக்கம் பல்லோக் பள்ளியும் முதலிடங்களை வென்றன.
மாணவியரில் 19 வயது தனிநபர் மற்றும் இரட்டையர் ஆகிய இரு பிரிவிலும் விருகம்பாக்கம் ஏ.வி.எம்., பள்ளி, முதலிடங்களை பிடித்து அசத்தியது.