/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வியாசர்பாடி கல்யாணபுரம் குடியிருப்பு கட்டுமான பணிகள் விறுவிறுப்பு
/
வியாசர்பாடி கல்யாணபுரம் குடியிருப்பு கட்டுமான பணிகள் விறுவிறுப்பு
வியாசர்பாடி கல்யாணபுரம் குடியிருப்பு கட்டுமான பணிகள் விறுவிறுப்பு
வியாசர்பாடி கல்யாணபுரம் குடியிருப்பு கட்டுமான பணிகள் விறுவிறுப்பு
ADDED : மே 01, 2024 12:46 AM

வியாசர்பாடி, வியாசர்பாடி, கல்யாணபுரத்தில், 26 கோடி ரூபாய் செலவில், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பு கட்டும் பணி, விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
சென்னை, வியாசர்பாடி, கல்யாணபுரம் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகள், கடந்த 1965ல் கட்டப்பட்டது. இதில், 192 வீடுகளில், 500க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இந்த கட்டடம் கட்டி, 58 ஆண்டுகளாகின்றன. மேலும், வீடுகள் பழுதடைந்து, அபாய நிலையில் காட்சியளித்தன.
விபத்து ஏற்படும் முன், பழைய கட்டடத்தை இடித்துவிட்டு, புதிதாக வீடுகள் கட்டித்தர வேண்டும் என, இவற்றில் வசித்தோர் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து, தொழில்நுட்ப வல்லுனர்கள் குழு கட்டடத்தை ஆய்வு செய்ததில், மிகவும் பழுதடைந்து, அபாய நிலையில் இருப்பது தெரிந்தது.
எனவே, பழைய கட்டடத்தை இடித்து விட்டு, புதிதாக கட்ட வேண்டும் என, தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு வாரியம் முடிவெடுத்தது.
இதையடுத்து, கடந்த 2021 பிப்ரவரியில், பழைய வீடுகளை இடிக்கும் பணிகள் துவங்கி, ஜூன் மாதம் முடிந்தன.
பின், 2021 ஜூலையில், கட்டுமான பணிக்கான பூமி பூஜை போடப்பட்டது. அதன் பின், கட்டுமான பணிகள் விறுவிறுப்பாக நடந்து வந்தன.
இதற்காக, 26 கோடி ரூபாய் மதிப்பீட்டில், தரைதளத்துடன் நான்கு மாடிகளில், 192 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டன.
ஏற்கனவே, 330 சதுர அடியில் வீடுகள் அமைக்கப்பட்ட நிலையில், தற்போது 400 சதுர அடியாக வீடுகளின் அளவு அதிகரிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:
தற்போது 80 சதவீதம் கட்டுமான பணி முடிவடைந்துள்ளது. கட்டுமான பணி முழுதும் முடிவடைந்துள்ள நிலையில், குடிநீர் இணைப்பு, மின் இணைப்பு, டைல்ஸ் ஒட்டும் பணி, கதவு, ஜன்னல் அமைப்பு உள்ளிட்ட பணிகள் நடந்து வருகின்றன.
இதில் மழைநீர் சேகரிப்பு திட்டம், சிமென்ட் சாலை உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட உள்ளன. வரும் ஆறு மாதங்களுக்குள், பணிகள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.