/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வரி வாங்க மறுக்கும் குடிநீர் வாரியம்
/
வரி வாங்க மறுக்கும் குடிநீர் வாரியம்
ADDED : மே 02, 2024 12:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆலந்துார் மண்டலத்தில், குடிநீர் வாரியத்தின் சார்பில் வீடுகளுக்கு குடிநீர் வரி வசூலிக்கப்படுகிறது.
பல பகுதிகளில் இணைப்பு வழங்காத வாரியம், அதற்குண்டான வரியை மட்டும் வீட்டு உரிமையாளர்களிடம் வசூலிக்கிறது. பொது குடிநீர் வழங்குகிறோம் எனக்கூறி, இத்தொகையை வசூலித்து வருகிறது.
இந்நிலையில், லோக்சபா தேர்தல் பணியை காரணம் காட்டி, ஏப்., 19ம் தேதி வரை, குடிநீர் வாரியத்தினர் கட்டணம் வாங்க மறுத்து, பொதுமக்களை திருப்பி அனுப்பினர்.
வரி செலுத்த, மே 20ம் தேதிக்கு பின் வரும்படி மெத்தனமாக கூறியுள்ளனர். குடிநீர் வாரியம், வரியை முறையாக வசூலிக்க வேண்டும்.
- - சமூக ஆர்வலர்கள்.

