/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நீராழி மண்டபத்தில் மீண்டும் நீர்வீழ்ச்சி
/
நீராழி மண்டபத்தில் மீண்டும் நீர்வீழ்ச்சி
ADDED : ஜூலை 20, 2024 01:44 AM

சென்னை:மயிலாப்பூரில் அமைந்துள்ளது, கற்பகாம்பாள் உடனுறை கபாலீஸ்வரர் கோவில். இக்கோவிலின் தெப்பக்குளம், பல ஏக்கர் பரப்பு கொண்டது. ஆண்டுதோறும் தெப்பத் திருவிழா விமரிசையாக நடத்தப்படுகிறது.
கோவிலுக்கு வரும் பக்தர்களின் மனமகிழ்ச்சிக்காக, குளத்தில் மீன்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், கடந்தாண்டு நவம்பரில், கோவில் குளத்தில் இருந்த ஆயிரக்கணக்கான மீன்கள் இறந்து மிதந்தன.
ஹிந்து சமய அறநிலையத் துறை நடத்திய ஆய்வில், கார்த்திகை தீபத்தை முன்னிட்டு ஆயிரக்கணக்கான விளக்குகள் குளக்கரையில் ஏற்றப்பட்டன.
அன்றைய தினம் பெய்த மழை காரணமாக விளக்குகள் அணைந்து, அந்த எண்ணெய் குளத்தில் உள்ள நீரில் கலந்துள்ளது. இதனால் மீன்களுக்கு ஆக்சிஜன் கிடைக்காமல் இறந்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, குளத்தில் உள்ள மீன்களுக்கு, 'ஆக்சிஜன்' கிடைக்கும் வகையில், நீராழி மண்டபத்தில் செயற்கை நீர்வீழ்ச்சி உருவாக்கப்பட்டது.
ஒரு சில மாதங்களுக்குப் பின், அது இயங்காமல் இருந்தது. தற்போது சீரமைக்கப்பட்டு, மீண்டும் செயல்பாட்டிற்கு வந்துள்ளது.