/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சர்வதேச யோகாவில் தங்கம் வென்ற சென்னை மாணவர்களுக்கு வரவேற்பு
/
சர்வதேச யோகாவில் தங்கம் வென்ற சென்னை மாணவர்களுக்கு வரவேற்பு
சர்வதேச யோகாவில் தங்கம் வென்ற சென்னை மாணவர்களுக்கு வரவேற்பு
சர்வதேச யோகாவில் தங்கம் வென்ற சென்னை மாணவர்களுக்கு வரவேற்பு
ADDED : ஜூன் 28, 2024 12:36 AM

சென்னை, நேபாளத்தில் நடந்த சர்வதேச யோகா போட்டியில், சென்னையைச் சேர்ந்த மாணவர்கள் தங்கம் வென்று, சாதனை படைத்துள்ளனர்.
நேபாளத்தின், போக்ரா நகரில், கடந்த 23, 24ம் தேதிகளில், சர்வதேச இளையோர் விளையாட்டு போட்டிகள் நடந்தன.
அதில், யோகா, செஸ் என மனதை ஒருநிலைப்படுத்தும் போட்டிகளில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர்.
யோகாவைப் பொறுத்தவரை, 10, 14, 17 வயதுக்கு உட்பட்டோருக்கு, 12 வினாடிகள் மூச்சை நிலை நிறுத்துவதுடன், 15 ஆசனங்களை தொடர்ச்சியாக செய்ய வேண்டும் என்ற இலக்குடன் நடந்தது.
இதில், அனைத்திந்திய இளையோர் விளையாட்டு சம்மேளன செயலர் மாரியப்பன் தலைமையில், ஏழு மாணவர்களும், செஸ் போட்டிக்கு ஒருவரும் என, எட்டு பேர் பங்கேற்றனர்.
இவர்கள் அனைவரும், போட்டிகளில் வென்று தங்கப்பதக்கங்களை தட்டிக்கொண்டு, நேற்று சென்னை வந்தனர். அவர்களுக்கு, சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது.
வெற்றி பெற்றோர் விபரம்
மாணவர் பெயர் வயது பிரிவு விளையாட்டு
வர்ஷா 10 யோகா
கனிஷ்க் 12 யோகா
கிஷோர்குமார் 12 யோகா
சாதனாஸ்ரீ 14 யோகா
திருமுருகன் 14 செஸ்
கரண் 17 யோகா
ஆர்.வர்ஷா 17 யோகா
யுவராஜ் 17 யோகா

