/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
குறைகிறது நிலத்தடி நீர்மட்டம் என்ன செய்ய போகிறது வாரியம்?
/
குறைகிறது நிலத்தடி நீர்மட்டம் என்ன செய்ய போகிறது வாரியம்?
குறைகிறது நிலத்தடி நீர்மட்டம் என்ன செய்ய போகிறது வாரியம்?
குறைகிறது நிலத்தடி நீர்மட்டம் என்ன செய்ய போகிறது வாரியம்?
ADDED : செப் 12, 2024 12:08 AM
சென்னை, நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு, மழைநீர் சேகரிப்பில் தொலைநோக்கு பார்வையின்மை, கட்டமைப்புகளை முறையாக பராமரிக்காமை போன்ற காரணத்தால்,சென்னையில் நிலத்தடி நீர் போதிய அளவு பூமிக்குள் தங்குவதில்லை.
அதனால், சென்னை மாநகராட்சியின் 200 வார்டிலும், நிலத்தடி நீர் கண்டறிய அளவுமானிகள் அமைக்கப்பட்டுள்ளன.
ஆண்டு சராசரி அளவில், 2021ஐ விட, 2022ல் 25 சதவீதம் மழை பொழிவு குறைவாக இருந்தது. இந்த வகையில், 2022ல் தென்மேற்கு பருவமழை, 44 செ.மீ.,யும், 2023ல் 78 செ.மீ.,யும் பெய்தது.
அதேபோல், வடகிழக்கு பருவமழை, 2022ல் 92 செ.மீ.,யும், 2023ல் 18 சதவீதம் கூடுதலாக, 109 செ.மீ.,யும் பெய்தது.
இந்தாண்டு கோடையில், அவ்வப்போது மழை பெய்தது. அத்துடன் நான்கு மாதங்களாக, எதிர்பாராத மழை பெய்கிறது. இதனால் மே, ஜூன், ஜூலை மாதங்களில் பரவலாக நிலத்தடி நீர் மட்டம் அதிகரித்துள்ளது.
ஆனால், ஜூலை மாதத்தை விட ஆகஸ்ட் மாதத்தில், 11 மண்டலங்களில் நிலத்தடி நீர் குறைந்துள்ளது. அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லுார் மண்டலங்களில், ஓரளவு அதிகரித்துள்ளது.
அதேபோல், கடந்தாண்டு ஆக., மாதத்தை விட, இந்தாண்டு ஆகஸ்டில், 11 மண்டலங்களில் நிலத்தடிநீர் குறைந்துள்ளது. இதில், மாதவரத்தில் 6 அடி மற்றும் அண்ணா நகரில் 5 அடி நிலத்தடி நீர் குறைந்துள்ளது.
மேலும், 2022, 2023, 2024ம் ஆண்டில், ஆக., மாதங்களை கணக்கிடும் போது, 2023ம் ஆண்டை விட, 2024ல், 2 அடி வரை குறைந்துள்ளது.
இதனால், நிலத்தடி நீர் குறைந்துவரும் மண்டலங்களில், நிலத்தடி நீர் பூமிக்கடியில் தங்கும் வகையில் நடவடிக்கை எடுக்க, மாநகராட்சி மற்றும் குடிநீர் வாரியம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.