/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கண்ணப்பாளையம் சாலைக்கு விடிவு எப்போது?
/
கண்ணப்பாளையம் சாலைக்கு விடிவு எப்போது?
ADDED : மார் 03, 2025 12:54 AM

ஆவடி,
ஆவடி - பூந்தமல்லி பகுதியை இணைக்கும் கண்ணப்பாளையம் பிரதான சாலை 1.50 கி.மீ., துாரம் உடையது.
இந்த சாலையையொட்டி, வி.ஜி.வி., நகர், அருணாச்சலா நகர் மற்றும் ஆயில்சேரி சுற்றுவட்டார பகுதியில் 1000க்கும் மேற்பட்ட வீடுகள், கல் சேம்பர்கள், விவசாய நிலங்கள் மற்றும் சிறு குறு கடைகள் உள்ளன.
ஆவடியில் இருந்து சோராஞ்சேரி, ஆயில்சேரி, பருத்திப்பட்டு, திருவேற்காடு, பட்டாபிராம், வண்டலுார் - மீஞ்சூர்வெளிவட்ட சாலையில்பல்வேறு பணிக்கு செல்வோர் என, தினமும் ஆயிரக்கணக்கானோர் சென்று வருகின்றனர்.
இந்த சாலை கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன் போடப்பட்டது.
இதில், கனரக வாகனங்கள் மற்றும் தண்ணீர் டிராக்டர்கள் அதிக அளவில் சென்று வருகின்றன. மழை காலத்தில், வெள்ளம் வடிய வடிகால் வசதியின்றி சாலை குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது.
இருசக்கர வாகன ஓட்டிகள், சாலையில் உள்ள பள்ளம் மற்றும் ஜல்லியில் இடறி விழுந்து விபத்தில் சிக்குகின்றனர்.
சாலையை சீரமைக்க வேண்டும் என, பகுதிவாசிகள் பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
கடந்த சில தினங்களுக்கு முன் ஊராட்சி நிர்வாகம் சார்பில் சாலை அமைத்திட அரசுக்கு திட்ட அறிக்கை அனுப்பப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், இதுவரை எந்த பணியும் நடக்கவில்லை.
எனவே சம்பந்தப்பட்ட பூந்தமல்லி ஊராட்சி மன்ற அதிகாரிகள், மழைநீர் வடிகால் உடன் தரமான சாலை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.