/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நல்லான் கால்வாய் தடுப்பு சுவர் சீரமைப்பது எப்போது?
/
நல்லான் கால்வாய் தடுப்பு சுவர் சீரமைப்பது எப்போது?
நல்லான் கால்வாய் தடுப்பு சுவர் சீரமைப்பது எப்போது?
நல்லான் கால்வாய் தடுப்பு சுவர் சீரமைப்பது எப்போது?
ADDED : மே 13, 2024 02:02 AM

அண்ணா நகர்:அண்ணா நகர் வழியாக செல்லும் நல்லான் கால்வாயின் தடுப்புச்சுவரை, விபத்துக்கு முன் சீரமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
சென்னையின் பெரிய மழைநீர் வடிகால்வாய்களில், ஓட்டேரி நல்லான் கால்வாயும் ஒன்று. மழைக்காலங்களில் அதிகப்படியான நீர் மற்றும் வெள்ளம் வடிந்து செல்ல, ஆங்கிலேயர் காலத்தில் அமைக்கப்பட்டது.
இக்கால்வாய், அண்ணா நகர் மண்டலத்திற்குட்பட்ட பாடி, வில்லிவாக்கத்தில் துவங்கி, அண்ணா நகர், கீழ்ப்பாக்கம் கார்டன், அயனாவரம், புரசைவாக்கம், ஓட்டேரி, புளியந்தோப்பு வழியாக பகிங்ஹாம் கால்வாயில் இணைகிறது.
நீர்வளத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 10.84 கி.மீ., துாரம் கொண்ட கால்வாயை முறையாக பராமரிப்பது இல்லை. குறிப்பாக, மழை வெள்ளத்திற்குப் பின், முறையாக துார்வாரப்படவில்லை.
அதேபோல, அண்ணா நகர் 3வது அவென்யூவில் உள்ள அண்ணா நகர் காவல் நிலையம் அருகில் செல்லும் இக்கால்வாயின் தடுப்புச்சுவர் மழையின் போது உடைக்கப்பட்டது.
அதன்பின், தடுப்புச்சுவரை சீரமைக்காமல் அப்படியே விட்டுவிட்டனர். இதனால், திறந்தவெளியாக உள்ள அக்கால்வாயை, அவ்வழியாக செல்வோர் சிறுநீர் கழிக்கும் இடமாக பயன்படுத்தி வருகின்றனர். மேலும், விபத்து ஏற்படும் அபாய நிலை உள்ளது.
அதேபோல, கால்வாயில் குப்பை குவிந்து கிடப்பதால், நீரோட்டமும் பாதிக்கப்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் தடுப்புச்சுவர் அமைத்து, கால்வாயை துார்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.