/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சென்னை மாவட்டத்தில் ஓட்டுப்பதிவில் முரண்பாடு ஏன்?
/
சென்னை மாவட்டத்தில் ஓட்டுப்பதிவில் முரண்பாடு ஏன்?
ADDED : ஏப் 20, 2024 11:28 PM

சென்னை மாவட்டத்தில் ஓட்டுப்பதிவு 68 சதவீதமாக மாநில தேர்தல் ஆணையம் நேற்று முன்தினம் அறிவித்தது. ஆனால், 56.10 சதவீதம் மட்டுமே பதிவானதாக நேற்று தெரிவிக்கப்பட்டது.
சுமார், 12 சதவீதம் ஓட்டுப்பதிவு குறைத்து காட்டப்பட்டதற்கு, மாநில தேர்தல் அலுவலர்கள், மாவட்ட தேர்தல் அலுவலர்களுடன் கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாக செயல்பட்டதே காரணமாக கூறப்படுகிறது.
குறிப்பாக, குறிப்பிட்ட ஓட்டுச்சாவடி அலுவலர்களுடன் மட்டும் பேசி, மாநில தேர்தல் அலுவலர்கள் சென்னையின் ஓட்டுப்பதிவை காண்பித்துள்ளனர். குறிப்பாக, 10க்கும் மேற்பட்ட ஓட்டுச்சாவடிகளில் 70 சதவீத ஓட்டுப்பதிவு வந்ததை உறுதி செய்து, மாவட்டம் முழுதும், அவ்வாறே வந்திருக்கும் என, உத்தேச விபரம் வெளியிடப்பட்டுள்ளது.
முழுமையான ஓட்டுப்பதிவு விபரம் வந்த பின், அவை மாற்றப்பட்டுள்ளது. அதேநேரம், வடசென்னையில் ஓட்டுப்பதிவு மாறுபடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

