/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வேளச்சேரி நாட்டார் குளம் சீரமைப்புக்கு இடையூறு ஆக்கிரமிப்பாளர்கள் மீது நடவடிக்கை பாயுமா?
/
வேளச்சேரி நாட்டார் குளம் சீரமைப்புக்கு இடையூறு ஆக்கிரமிப்பாளர்கள் மீது நடவடிக்கை பாயுமா?
வேளச்சேரி நாட்டார் குளம் சீரமைப்புக்கு இடையூறு ஆக்கிரமிப்பாளர்கள் மீது நடவடிக்கை பாயுமா?
வேளச்சேரி நாட்டார் குளம் சீரமைப்புக்கு இடையூறு ஆக்கிரமிப்பாளர்கள் மீது நடவடிக்கை பாயுமா?
ADDED : மே 06, 2024 01:34 AM

வேளச்சேரி:அடையாறு மண்டலம், 177வது வார்டு வேளச்சேரியில், ஒரு ஏக்கர் பரப்பளவு உடைய நாட்டார் குளம் உள்ளது. இந்த குளம், சாலை மட்டத்தில் இருந்ததால், மழைநீர் சேமிக்க முடியாத நிலை ஏற்பட்டது.
கட்டட கழிவுகள், குப்பை கொட்டி, குளத்தை சாலை மட்டத்திற்கு மாற்றி, சிலர் ஆக்கிரமிக்க முயன்றனர்.
கடந்த 2019ல் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டபோது, நீர்நிலைகளை பாதுகாக்க 'நம் நாளிதழ்' முன்வந்தது.
'களமிறங்குவோம் நமக்கு நாமே' என, பொது நலச்சங்கங்கள், தன்னார்வ அமைப்புகள், நீர்நிலைகளை சீரமைக்க முன்வர வேண்டும் என, நம் நாளிதழில் தொடர்ந்து அறிவிப்பு, விழிப்புணர்வு செய்திகள் வெளிவந்தன.
இதையடுத்து, நாட்டார் குளத்தை மீட்க, வேளச்சேரியை சேர்ந்த, கட்டப்பொம்மன் சங்கம், நலச்சங்கங்கள் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட தன்னார்வ அமைப்புகள் முன்வந்தன.
குளத்தை துார்வாரி, 10 அடி ஆழப்படுத்தி, அதில் 3 அடி மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு அமைத்தனர். 2020ம் ஆண்டு பருவமழையில், குளம் நிரம்பியது. 20 ஆண்டுகளுக்கு பின் குளம் நிரம்பியதால், வேளச்சேரி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இந்நிலையில், 'நமக்கு நாமே' திட்டத்தில், 55 லட்சம் ரூபாயில் குளத்தை மேம்படுத்த மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. கரையை பலப்படுத்தி, ஆழப்படுத்தி, மைய பகுதியில் கிணறு, நடைபாதை கட்டமைப்புடன் அமைக்க முடிவு செய்யப்பட்டது.
வருவாய் துறை சார்பில் குளம் அவீடு செய்யப்பட்ட நிலையில், குளத்தைச் சுற்றி வசிக்கும் சிலர், பணியை தொடரவிடாமல் ஓராண்டாக இடையூறு செய்தனர்.
இந்நிலையில், சில மாதங்களுக்கு முன் குளம் சீரமைப்பு பணி துவங்கியுள்ள நிலையில், சிலர் இடையூறு ஏற்படுத்தி வருகின்றனர்.
வேளச்சேரி பகுதி நலச்சங்கங்கள் கூறியதாவது:
சில ஆண்டுகளுக்கு முன், ஒரு கவுன்சிலர் குளத்தை ஆக்கிரமிக்க திட்டமிட்டார். 'தினமலர்' செய்தியால், ஆக்கிரமிப்பை தடுத்து குளம் மீட்கப்பட்டது. குளத்தைச் சுற்றி வசிக்கும் சிலர், ஒப்பந்த நிறுவனத்திற்கு இடையூறு ஏற்படுத்தி வருகின்றனர்.
மக்கள் பங்களிப்பில் மேம்படுத்தப்படுவதால், உயர்அதிகாரிகள் தலையிட்டு பணியை வேகப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, 'சிலர் இடையூறு செய்வது உண்மை தான். தடையை தகர்த்து, பணியை வேகப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம். இனிமேல் தடை ஏற்படுத்தினால், போலீசில் புகார் அளிக்க முடிவு செய்துள்ளோம்' என்றனர்.