ADDED : ஜூன் 27, 2024 12:29 AM

சென்னை, ராயபுரம் மண்டலத்திற்கு உட்பட்ட சிந்தாதிரிப்பேட்டையில், லபான் சாலை உள்ளது. இச்சாலையில் மழலையர் பள்ளி முதல், மேல்நிலைப் பள்ளி வரை மூன்று பள்ளிகள் உள்ளன.
இவற்றில், நுாற்றுக்கணக்கான மாணவர்கள் பயின்று வருகின்றனர். இங்கு வீடுகள் இல்லாததால், பல்வேறு பகுதியில் இருந்து கொண்டுவரப்படும் குப்பை, கல்யாணம் மகளிர் மேல்நிலைப்பள்ளி அருகே கொட்டப்படுகிறது.
மாதத்திற்கு ஒரு முறை அவற்றை அகற்றி வருகின்றனர். இதனால், அவ்வழியாக செல்லும் மாணவர்கள், கடும் துர்நாற்றத்தால் அவதிப்படுகின்றனர்.
மேலும், அருகே ஆட்டோ மெக்கானிக் வேலை செய்வோரும், உபயோகமற்ற 'ஆயில்'களை அங்கேயே கொட்டி வருகின்றனர். இதனால், தீ விபத்து ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள், மலைபோல் குவிந்து கிடக்கும் குப்பையை அகற்றவும், குப்பை கொட்டாமல் இருக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.