/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மெரினா முதலுதவி மையம் திறக்கப்படுமா?
/
மெரினா முதலுதவி மையம் திறக்கப்படுமா?
ADDED : செப் 12, 2024 12:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மெரினா அணுகு சாலையில் கலங்கரை விளக்கம், கண்ணகி சிலை, ஆகிய இரண்டு இடங்களில் சுற்றுலா துறை சார்பில் முதலுதவி சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டன. இவை, சில மாதங்கள் மட்டுமே உபயோகத்திற்காக திறந்து வைக்கப்பட்டன. பின், நிரந்தரமாக மூடப்பட்டுள்ளன. அங்கு ஆம்புலன்ஸ் வசதியும் இல்லை.
இதனால், கடல் அலையில் சிக்கி மீட்கப்படுவோருக்கும், விபத்துகளில் காயமடைவோருக்கும் விரைந்து முதலுதவி அளிக்க முடிவதில்லை.
எனவே, பூட்டி கிடக்கும் முதலுதவி சிகிச்சை மையங்களை விரைந்து திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- பி.நகுல் குமார், மயிலாப்பூர்.