/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஆயிரம் விளக்கு பகுதியில் நெரிசலுக்கு தீர்வு கிடைக்குமா?
/
ஆயிரம் விளக்கு பகுதியில் நெரிசலுக்கு தீர்வு கிடைக்குமா?
ஆயிரம் விளக்கு பகுதியில் நெரிசலுக்கு தீர்வு கிடைக்குமா?
ஆயிரம் விளக்கு பகுதியில் நெரிசலுக்கு தீர்வு கிடைக்குமா?
ADDED : ஆக 17, 2024 12:30 AM

சென்னை,
ஆயிரம்விளக்கு பகுதியில், சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்படும் வாகனங்களால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி, வாகன ஓட்டிகள் தவித்து வருகின்றனர்.
சென்னையில் பிரதானமாக உள்ள அண்ணாசாலையில், போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
நெரிசல் இன்றி செல்வதற்காக சில இடங்களில் சிக்னல் இன்றியும், சில இடங்களில் யு-டர்ன் மாற்றங்களும் அமலாகின.  இதன் காரணமாக தீவுத்திடல் முதல் ஆயிரம்விளக்கு வரை நெரிசலும் குறைந்துள்ளது.
ஆனால், தேனாம்பேட்டை முதல்  ஸ்பென்சர்சிக்னல் வரை, இரு வழிகளிலும் பீக் ஹவர்ஸ் நேரங்களில் ஊர்ந்து தான் செல்ல வேண்டி உள்ளது.
அதேபோல் கிண்டியிலிருந்து பிராட்வே நோக்கி வரும் வாகனங்கள், ஆயிரம்விளக்கு திரு.வி.க., சாலை சந்திப்பில் தான் சிக்னலில் நிற்க வேண்டும்.
ஆனால் ஆயிரம்விளக்கு பகுதியில் இயங்கி வரும் வணிக நிறுவனங்களுக்கென வாகன நிறுத்தம் ஏதும் இல்லாததால் அவற்றிற்கு வருவோர் சாலையை ஆக்கிரமித்து வாகனங்களை நிறுத்துகின்றனர்.
இதன் காரணமாகவே, ஆயிரம்விளக்கு பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே சாலையை ஆக்கிரமித்து வாகனங்கள் நிறுத்தாத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

