/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சின்னமலை நடைமேடையில் 'எஸ்கலேட்டர்' வசதி வருமா?
/
சின்னமலை நடைமேடையில் 'எஸ்கலேட்டர்' வசதி வருமா?
ADDED : ஏப் 26, 2024 12:15 AM
சின்னமலை, சின்னமலையில் உள்ள தாலுகா அலுவலக சாலையில், போக்குவரத்து அதிகம் இருக்கும். இச்சாலையில் ராஜ்பவன், நீதிமன்றம், மாநகர போக்குவரத்து பணிமனை, சர்ச், பேருந்து நிறுத்தம் உள்ளிட்டவை உள்ளன.
இச்சாலையை கடந்து செல்வோர் வசதிக்காக நடைமேடை அமைக்கப்பட்டது. இதையடுத்து, அப்பகுதியில் இருந்த சிக்னல் இயக்கம் சில நாட்களாக நிறுத்தப்பட்டது.
ஆனால், பல லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட நடைமேடையை யாரும் பயன்படுத்துவதில்லை. அனைவரும் சாலையை கடந்து தான் செல்கின்றனர். எனவே, வேறுவழியின்றி மீண்டும் சிக்னல் இயக்கப்பட்டு வருகிறது.
போக்குவரத்து நிறைந்த இந்த வழித்தடத்தில் சிக்னல் இருப்பதால், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இப்பிரச்னைக்கு நிரந்த தீர்வாக நடைமேடையை, 'எஸ்கலேட்டர்' வசதியுடன் மாற்ற வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

